×

இளம்பெண்ணின் மூக்கில் 2 வயதில் ெசன்ற பட்டன் 20 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றம் திருவனந்தபுரத்தில் பரபரப்பு

திருவனந்தபுரம், டிச.24: திருவனந்தபுரத்தில் 2 வயதில் மூக்கிற்குள் சென்ற சட்டை பட்டன் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இளம்பெண் மூக்கில் இருந்து அகற்றப்பட்டது. திருவனந்தபுரம் காரியம் பகுதியை சேர்ந்தவர் விமலா (22, பெயர் மாற்றம்) இவருக்கு அடுத்த வாரம் திருமணம் நடத்த ெபற்றோர் தீர்மானித்துள்ளனர். விமலாவுக்கு சிறு வயதில் இருந்து அடிக்கடி சளி, ஜலதோஷம், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு வந்தது. பல மருத்துவமனைகளில் காண்பித்தும் பலன் இல்லை. இந்நிலையில் திருமணம் நெருங்குவதால் கடந்த சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரம் பட்டத்தில் உள்ள எஸ்யுடி மருத்துவமனைக்கு சென்றார். இஎன்டி டாக்டர் அம்மு பார்வதி, விமலாவை பரிசோதித்தபோது, அவரது மூக்கில் ஒரு அசாதாரண சதை வளர்ச்சி இருப்பதை கண்டுபிடித்தார். அந்த பகுதி முழுவதும் பழுத்திருந்தது. அதை ஸ்கேன் ெசய்து பார்த்தபோது சதைக்குள் ஏதோ ஒரு பொருள் இருப்பது ெதரிய வந்தது. இதையடுத்து ரெனோ லித் என்ற நூதன அறுவை சிகிச்சை செய்து வளர்ந்திருந்த சதையை அகற்றினர். சதைக்குள் இருந்த பொருளை பார்த்த டாக்டர்கள் திடுக்கிட்டனர். அது ஒரு சட்டை பட்டன் என்று தெரிய வந்தது. ஒன்று அல்லது 2 வயதில் குழந்தையாக இருக்கும்போது பட்டன் விமலாவின் மூக்கில் சென்றிருக்கலாம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அது மூக்கிற்குள் இருந்துள்ளது. அதன்மேல் சதையும் வளர்ந்ததால் தான் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த டாக்டரும் இதை கண்டுபிடிக்க வில்லை. இதுபோன்ற சம்பவம் மிகவும் அபூர்வம் என்று டாக்டர் அம்மு பார்வதி தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் விமலா நலமாக உள்ளார்.

Tags :
× RELATED ரோஜாவனம் கல்லூரியில் உலக செவிலியர் தினவிழா